அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் 'நீரா' பானம்
- தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- நீரா இ-காமர்ஸ் முறையிலும் விற்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை தலைமையி டமாக க்கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1,200க்கும் அதிகமான விவசாயிகளை பங்குதாரர்க ளாக கொண்ட இந்நிறுவனம் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடு பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்கப்பட்டு வரும் நீரா இ-காமர்ஸ் முறை யிலும் விற்கப்படுகிறது.இது குறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்பி ரமணியன் கூறிய தாவது:- பல்வேறு வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் அடங்கிய 'நீரா' பானத்துக்கு முதன்முறை யாக ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்கா வில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர் குருசாமி என்பவரின் ரீஜென்ட் நார்த் அமெரிக்கா நிறுவனம், நீரா ஆர்டர் செய்துள்ளது. தற்போது தினசரி, 5,000 பாக்கெட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 20 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு ள்ளோம்.
ஆண்டு விற்பனை 25 கோடி ரூபாயை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. தற்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'நீரா', கன்டெய்னர் மூலம் அமெரி க்காவுக்கு ஏற்றுமதியாகிறது. வரும் நாட்களில் 5 கன்டெய்னர்கள் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம். நீரா விற்பனை அதிகரிப்பதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.