சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி மாணவர்கள் சாதனை
- 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த அணைபுதூரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவி ஹரினிகா 500-க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவன் ஹர்ஷத் 481 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி ஸ்ரீ சாந்தி 468 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் வேதியியல் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3 மாணவர்கள் 95 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 3 பேர் 90 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 85 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 18 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி 485 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி பிரியங்கா 480 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் 3 பேர் கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், 2 பேர் தமிழ் பாடத்திலும், ஒருவர் சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 28 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 27 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 16 பேர் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் பிளஸ்-2 மற்–றும் 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் பள்ளி முதல்வர் கணேஷ், நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் உள்பட மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.