புஞ்சைத்தலையூா் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
- மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூலனூர்:
மூலனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புஞ்சைத்தலையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பாா்வையாளராக கலந்து கொண்டாா். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம ஊராட்சிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 13 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் கடனுதவி, தோட்டக்கலைத் துறை மூலம் வெங்காய பரப்பு விரிவாக்கத்துக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மதுமிதா, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட முன்னோடி வாங்கி மேலாளா் அலெக்ஸ்சாண்டா், புஞ்சைத்தலையூா் ஊராட்சித் தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.