உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மினி டைடல் பார்க் வடிவமைப்பில் மாற்றம் செய்ய முடிவு

Published On 2022-11-14 04:10 GMT   |   Update On 2022-11-14 04:10 GMT
  • தேர்வான இடம் பாறைக்குழியாக இருந்ததால் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
  • கட்டுமான வடிவமைப்பில் மாற்றம் மேற்கொள்வதென திட்டமிட்டுள்ளனர்.

அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் ரூ.39 கோடி மதிப்பில், 7அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட திட்டமிடப்பட்டு 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.தேர்வான இடம் பாறைக்குழியாக இருந்ததால் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பிற இடங்களில், டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்த நிலையில் திருமுருகன்பூண்டியில் தாமதமானது.டைடல் பார்க் அதிகாரிகளும் கன்சல்டிங் நிறுவனத்தினரும் கள ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான வடிவமைப்பில் மாற்றம் மேற்கொள்வதென திட்டமிட்டுள்ளனர். தரைதளத்தில் இருந்து நேரடியாக கட்டுமான பணியை துவக்காமல் தூண்கள் எழுப்பி பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News