மழையால் பாதிக்கும் தீபாவளி வியாபாரம்
- திருப்பூா் மாநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
- தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்கள் கடைவீதிகளில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நிரம்பி வழியும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரம் பனியன் தொழில் நகரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மக்கள் வசிக்கிறார்கள். இதனால் தீபாவளிக்கு முந்தைய இரண்டு வாரங்கள் கடைவீதிகளில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடைவீதிகளில் கூட்டம் அலைேமாதி வருகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், குமரன் ரோடு, புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் வீதி, பி.என்., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து உள்ளார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுைற நாள் என்பதால் பெரும்பாலானவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாடைகள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்கள், நகைகள் வாங்குவதற்காகவும் குவிந்தனா். இதனால் குமரன் சாலை, புதுமாா்க்கெட் வீதி, காமராஜா் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்தநிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது வியாபாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூா் மாநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புத்தாடைகள், பரிசுப் பொருள்கள் வாங்கக் குவிந்தவா்களின் ஒரு பகுதியினா் கிளம்பிச் சென்றதால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அதேவேளையில், பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் இன்னும் ஒரிரு நாள்களில் போனஸ் பாட்டுவாடா செய்ய வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் புத்தாடைகள், பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.