உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

பல்லடத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-21 07:54 GMT   |   Update On 2023-05-21 07:54 GMT
  • பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் பல்லடம் கிளை சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழக மின்வாரியத்தில் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் 58000 காலிபணியி டங்களை நிரப்பிட வேண்டும்.அரசாணை எண் 100/19.10.2010 இன் படி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும்,வாரிய ஆணை எண் 02 ஐ/12.04.2022/முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு,விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு எம்பிளாயீஸ் பெடரேஷன் சங்க செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் அங்குராஜ், வடுகநாத சாமி, சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News