உள்ளூர் செய்திகள்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

அரசு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்- சுப்பராயன் எம்.பி., அறிவுறுத்தல்

Published On 2023-09-29 09:42 GMT   |   Update On 2023-09-29 09:42 GMT
  • பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர்-திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பூங்கா (திறந்தவெளி காலி இடம்) மேம்பாடு செய்தல், அம்ரூத் திட்டத்தின் கீழ் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், கட்டிட மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,பிற துறைகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்துணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் நியாய விலைக்கடைகள், புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுப்பராயன் எம்.பி., தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News