குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்: தளி பேரூராட்சியில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
- வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடிமங்கலம்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தளி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பங்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1.000 என்கிற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்திவருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6½ லட்சத்தில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
தளி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.82.20லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாநில நிதிக்குழுதிட்டத்தின் கீழ் ரூ.87லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகளை துவக்கி மற்றும்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன்,வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை தாசில்தார் சுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன்,செந்தில் கணேஷ்மாலா, தளி பேரூராட்சித்தலைவர் உதயகுமார், பேரூராட்சி செயல்அலுவலர் கல்பனா, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா முருகானந்தம், புக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வாத்தாள், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.