உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பப்பாளி செடியில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

Published On 2022-11-16 08:03 GMT   |   Update On 2022-11-16 08:03 GMT
  • நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
  • சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது.

திருப்பூர்:

பொங்கலூர் பகுதியில் பழத்திற்காகவும், பால் எடுப்பதற்காகவும் கணிசமான விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பப்பாளிக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வருகிறது.

ஒரு கிலோ 11 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இது குறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது. பின் படிப்படியாக நிலைமை சீரடைந்தது. கடந்த ஆண்டு சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்தன. இந்த சீசனில் ஓரளவு விலை கிடைக்கிறது.ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழி இன்றி தவித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News