உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் - திருப்பூரில் 1-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-04-24 04:27 GMT   |   Update On 2023-04-24 04:27 GMT
  • பயிற்சியில் பங்கேற்கும்அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
  • கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

 திருப்பூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடை கால பயிற்சி முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.எனவே இந்த பயிற்சி முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு நல அதிகாரியை 74017 03515 என்ற எண்ணிலும், தடகள பயிற்சியாளரை 88838 73814 என்ற எண்ணிலும், உதவியாளரை 97886 47557 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News