உள்ளூர் செய்திகள்

 வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.

வன உயிரின வார விழாவையொட்டி உடுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Published On 2022-10-03 07:14 GMT   |   Update On 2022-10-03 07:14 GMT
  • ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
  • வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

உடுமலை:

வன உயிரின வார விழாவையொட்டி, அமராவதி வனச்சரகத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வார விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு, உடுமலையில், பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், இணைய வழி வாயிலாக கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.நேற்று, திருப்பூர் வனக்கோ ட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, 'வன உயிரின வார விழா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.அமராவதி வனச்சரகத்தில், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும், 'வனம் மற்றும் வன உயிரினங்களை காப்போம்' என சுற்றுலா பயணிகள், உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கையெழுத்து பிரசாரம் துவக்கப்பட்டது.மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், திருப்பூர் வனகோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

Tags:    

Similar News