உள்ளூர் செய்திகள்

லோகநாதன்.

பல்லடம் மந்திரிபாளையம் வழிப்பறி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

Published On 2022-06-30 05:58 GMT   |   Update On 2022-06-30 08:05 GMT
  • லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
  • திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன் என தெரியவந்தது.

பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம் கிராமத்தில் கல்லாங்காடு தோட்டத்தில் வசித்து வந்த முத்துசாமி மனைவி பாலாமணி(57). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 26 ந்தேதி குடிக்க தண்ணீர் வாங்க தனது தோட்டத்தில் இருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்றார். அப்போது பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்ற மர்ம நபர் தப்பியோடினார். அவர் அடுத்த சில நாட்களில் கேத்தனூர் வாகன தணிக்கையின் போது பிடிப்பட்டார். அவர் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி. சாலையில் உள்ள மணியக்காரர் காம்பவுண்ட்டில் வசிக்கும் தனபால் மகன் லோகநாதன்(27) என தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாலாமணியிடம் தங்க செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை பல்லடம் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் லோகநாதன் குற்றவாளி என்பது உறுதிபடுத்தப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

Similar News