திறன்மிகு திருப்பூர் இலச்சினை தயாரித்து அனுப்பினால் பரிசு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
- தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மேம்படுத்தும் வகையில் 'திறன்மிகு திருப்பூர்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் தொழில் வளர்ச்சி பெருக்கவும், பசுமை மாநகராட்சியாக வளப்படுத்தவும், தொழிலாளர் நலன் காக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், மாநகரை அழகுபடுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது. திறன்மிகு திருப்பூர் திட்டத்துக்கு இலச்சினை வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலச்சினையை வடிவமைத்து protiruppurcorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.