தேசத்தின் மீது மாணவர்கள்அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் - லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் பேச்சு
- நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
- மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் தனியார் பள்ளி சார்பில் 1971-ம் ஆண்டு கால கட்டத்தில் பணியில் இருந்த போர் வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீரரைப் போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கலந்து கொண்டு முன்னாள் ராணுவ போர்வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும்போது "போர் வீரர்கள் நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்கள். அதேபோல் மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும், அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மேலும் இந்தியா ஒற்றுமைக்கு போர் வீரர்கள் மட்டும் காரணம் இல்லை, ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறையிலும் பணியாற்றுபவர்களும் முக்கிய காரணமாகும். நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.