உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

75-வது சுதந்திரதினத்தையொட்டி உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி 2 நாட்கள் நடக்கிறது

Published On 2022-08-08 06:34 GMT   |   Update On 2022-08-08 06:34 GMT
  • 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
  • 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

உடுமலை :

பாரத திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா நிறைவை ஒட்டி உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஒரே சமயத்தில் 75 மாணவ மாணவிகள் தேசத் தலைவர்களின் படங்களை வரையும் இந்த நிகழ்ச்சியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் இல்ல மாணவிகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் ஓவியங்களை வரைய உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடுமலை 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர். இரு நிகழ்ச்சிகளை உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு ,துணைத்தலைவர் சிவகுமார் ,நூலக வாசகர்வட்டஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் வீரமணி, நூலகர் கணேசன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி ,நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஷ்ரப் சித்திகா, மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். ஓவிய போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் மகளிர் வாசகர் வட்ட தலைவருமான விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார் .

Tags:    

Similar News