உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊதியூா் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Published On 2023-05-30 05:10 GMT   |   Update On 2023-05-30 05:10 GMT
  • ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது.
  • மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது.

காங்கயம் :

காங்கயம் அருகே ஊதியூா் வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடிக்க வலியுறுத்தி காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளா் முத்துவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் காங்கயம் வட்டம், ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப் பகுதிக்குள் நுழைந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளனா். எனவே வனத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News