உள்ளூர் செய்திகள் (District)

பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு வாகனங்களை படத்தில் காணலாம்.

பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் பொதுமக்கள், டிரைவர்கள் அவதி

Published On 2023-09-12 10:58 GMT   |   Update On 2023-09-12 10:58 GMT
  • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
  • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News