பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்
- மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
திருப்பூர்:
பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.அரசு அலுவலர்களின் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக 100 ரூபாய், மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் 200 ரூபாய், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து, அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இதனால் டீக்கடை, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.
பொது இடங்களில்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகுறிப்பாக பஸ் நிலையத்தில் சிறார்கள் சிலர் எப்போதும் புகைத்தவாறு நிற்கின்றனர். போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.