உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ. 1.50 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
- 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர்.
உடுமலை :
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை துறையின் சார்பில் உடுமலை கபூர் கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு, உடுமலை தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலை காலையிலேயே சந்தைக்கு கொண்டு வந்துகொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் மட்டும் 1832 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 818 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ. 1 கோடியே 63 லட்சத்து 46 ஆயிரத்து 620 விற்பனையானது .
இந்த காய்கறிகளை பொதுமக்கள் 68ஆயிரத்து 336 பேர் வாங்கி பயனடைந்தனர். கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் எண்ணிக்கை 31 பேர் குறைவாக இருந்த நிலையில் காய்கறிகள் வரத்து 365 கிலோ அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகை ரூ. 4 லட்சத்து 815 கூடுதலாக இருந்தது. காய்கறிகள் வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த மே மாதத்தை விட ஜூன் மாதம் 1600 பேர் கூடுதலாக வந்திருந்தனர்.