உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய்.

பல்லடம் அருகே நீர் ஆதார குட்டையில் கழிவுநீர் - பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2023-03-23 11:18 GMT   |   Update On 2023-03-23 11:18 GMT
  • குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
  • கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரைப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் கழிவு நீர் கால்வாய் அமைத்து, கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும். இந்த குட்டை நீரை நம்பி வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் மகிமையை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைக ளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலை வில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் உறிஞ்சு குழிஅமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, பாதுகாத்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News