உள்ளூர் செய்திகள்
மின் தேவையை பூர்த்தி செய்ய அரசு அலுவலகங்களில் சோலார் பேனல்
- அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
- விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மடத்துக்குளம் :
தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.