உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவிகளை படத்தில் காணலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் பிளஸ்- 1 தேர்வு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்

Published On 2023-03-14 06:51 GMT   |   Update On 2023-03-14 06:51 GMT
  • 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர்.
  • 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் இன்று பிளஸ் 1 தேர்வும் தொடங்கியது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 217 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 556 மாணவ, மாணவிகள், 214 தனித்தேர்வர் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர். முதன்மை கண்காணி ப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் என மொத்தம் 1,608 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டனர்.கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் தலைமை யில் 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீரெனில் சென்று சோதனை நடத்தினர்.

Tags:    

Similar News