உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Published On 2022-12-15 07:23 GMT   |   Update On 2022-12-15 07:23 GMT
  • எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது இதன் நோக்கம்.
  • அடிப்படை கல்வியை கற்பிக்க ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் :

தமிழ்நாடு எழுத்தறிவு முனைவு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் வாயிலாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது இதன் நோக்கம்.

இத்திட்டம் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள் மற்றும் ஊரக பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து திருப்பூரில் 18 ஆயிரம் பேரை இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி அளிக்க 45 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள்மேல்நிலை பள்ளியில் நடந்தது.

உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் வேல்முருகன், வடிவேல், குரல்குட்டை துவக்கப்பள்ளி ஆசிரியர் ஈஸ்வரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News