உள்ளூர் செய்திகள்
பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு
- பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது.
இதன்படி, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது.
தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.