உள்ளூர் செய்திகள்

மின் பாதிப்பை சரி செய்வதற்கு 18 பணியாளர் குழுக்கள் அமைப்பு

Published On 2022-08-03 08:27 GMT   |   Update On 2022-08-03 08:27 GMT
  • நாமக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை மற்றும் சேதாரங்களை உடனுக்குடன் சரிசெய்ய 18 பணியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • பொதுமக்கள் மின்தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பாா்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை மற்றும் சேதாரங்களை உடனுக்குடன் சரிசெய்ய 18 பணியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், மின்கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவைக்கு ஏற்ப இருப்பில் வைக்–கப்பட்டுள்ளன. மழை–யின்போது பொதுமக்கள் மின் சாதனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். மின் கம்பிகள் அறுந்து கிடப்பது தெரியவந்தால், மின் கம்பிகளின் அருகில் செல்லாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் மின்தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News