அய்யலூர் சந்தையில் தக்காளி விலை உயர்வு வெளியூர்களுக்கு எற்றுமதி
- வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது.
- அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிகளுக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்ட ங்களில் இருந்து வரும் விவசாயிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் ெசய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை யடைந்தனர்.
தற்போது வெளியூர்க ளுக்கு அதிக அளவு ஏற்றுமதியாவதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.450 முதல் ரூ.520 வரை விலை ேகட்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். தக்காளி விவசாயிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். எனவே அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.