உள்ளூர் செய்திகள் (District)

தக்காளி விலை கிலோ ரூ.32 யை எட்டியது

Published On 2023-11-09 09:34 GMT   |   Update On 2023-11-09 09:34 GMT
  • தருமபுரியில் தக்காளி விலை உயர்ந்தது.
  • வியாபாரிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சுழற்சி முறையில் தக்காளியை அதிகபடியாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், காரிமங்கலம் மற்றும் மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் விளைவித்த தக்காளி அறுவடை முடிந்து புதிய தக்காளி பயிர்களை பயிரிட்டுள்ளதாலும் ஏற்கனவே பயிரிட்டுள்ள விவசாயிகளின் தக்காளி செடிகள் சில வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் தக்காளி மார்க்கெட்டிற்கு தக்காளி வரது குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 12 ரூபாயிலிருந்து தொடர்ந்து 16 ரூபாய் வரை விலை உயர்ந்து நீடித்து வந்த நிலையில் நவம்பர் 1 முதல் 21 ரூபாயிலிருந்து 22 ரூபாய்க்கு விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் படிப்படியாக தக்காளி வரத்து குறைத்துள்ளது. இன்று தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூபாய் 32-க்கு விற்பனை செய்ய ப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் புதிதாக பயிரிட்டுள்ள தக்காளி விளைச்சல் வரத் தொடங்கினால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News