உள்ளூர் செய்திகள்

சுருளி அருவியில் நீர்வரத்து சீரானது.

நீர்வரத்து சீரானது சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

Published On 2023-01-25 05:08 GMT   |   Update On 2023-01-25 05:08 GMT
  • மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து சென்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.

இன்றுகாலை நீர்வரத்து சீரானது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து சென்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 130.30 அடியாக உள்ளது. 466 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1233 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 52.03 அடியாக உள்ளது. அணைக்கு 1124 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.35 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.93 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

தேக்கடி 5.2, பெரியாறு 15.6, போடி 1.6, ஆண்டிபட்டி 4.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News