உள்ளூர் செய்திகள் (District)

பயிற்சி முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

மாற்றுதிறன் மாணவர்களின் பெற்றோருக்கு பயிற்சி முகாம்

Published On 2023-03-18 10:05 GMT   |   Update On 2023-03-18 10:05 GMT
  • பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராமேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் கருத்தாளர்களாக கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி, அங்கன்வாடி பணியாளர் விஜயலட்சுமி, இயன்முறை மருத்துவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு சரியான உடல் சமநிலை மற்றும் குழந்தைகளை தூக்கி செல்லும் முறைகள், ஆரம்பகால குறைபாடுகள் அடையாளம் கண்டு கொள்ளுதல், மருத்துவம் உள்ளடக்கிய கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

சிறப்பு பயிற்றுநர்கள் கவிதா, மகேஷ்வரி மற்றும் பெரியசாமி ஆகியோர் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் மாற்றி அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் உதவி உபகரணங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பற்றி பேசினர்.

இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News