செய்துங்கநல்லூரில் விவசாயிகளுக்கு பயிற்சி
- செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
- வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் முருகன் பயிர் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பட்டது
செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்க திட்டங்கள் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான செய்துங்கநல்லூரில் பயிர்கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொருட்சிறப்பறிஞர் முருகன் பயிர் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி மேலாண்மை அலுவலர் ரகுநாத் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சிக்கு செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.