அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
- மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
- மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.
திருவாரூர்:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு குளிக்கரை ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, பூமியை வருங்கால சந்த்தியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருக்கும் உள்ளது.
மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
மரங்களின் ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம்.
நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன.
மாணவர்களிடம் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.
ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலையும் கூட என சொல்லி, மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.
இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.