உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 5-அடுக்கு பாதுகாப்பு

Published On 2023-08-14 08:31 GMT   |   Update On 2023-08-14 08:31 GMT
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் 5-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
  • ரெயில்வே ஜங்ஷனிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது

கே.கே. நகர்,

நாடுமுழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.இதையடுத்து பாதுகாப்பு பணிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.திருச்சி விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள், ெவளியே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழக போலீசாரின் சோதனை நடைபெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகனங்கள் நிற்கும் இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த சோதனையானது நேற்று இரவு தொடங்கியது. நாளை மற்றும் நாளை மறுநாள் வரை (16 -ந் தேதி) வரை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.இந்த சோதனை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணி அளவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றார்.இதே போன்று திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கும் பயணிகள் உடைமைகள் மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலம் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. இதில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News