உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினர் குறித்து சர்ச்சை கருத்து

Published On 2023-08-04 07:00 GMT   |   Update On 2023-08-04 07:00 GMT
  • சீமான் மீது நடவடிக்கை கோரி புகார்
  • இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்

திருச்சி 

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா, தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சிலர் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறிவிட்டு, இது நாள் வரை தனது கருத்துக்கு வருத்தமும், தனது வார்த்தையை திரும்ப பெறாமலும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News