உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவை தொடங்கியது - முதல் நாளில் 100 பேர் பயணம்

Published On 2023-11-03 07:06 GMT   |   Update On 2023-11-03 07:06 GMT
  • தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
  • இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

கே.கே. நகர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வியட்நாமில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

விமான சேவை தொடங்கியதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு வியடாமில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டது. வியட்நாமுக்கு முன்பதிவு செய்து இருந்த 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக விமான சேவை துவக்க நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால் மற்றும் விமான நிறுவன பொறுப்பாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மே லும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிறுவனத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி விமான சேவையை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

Tags:    

Similar News