உள்ளூர் செய்திகள்

வரலாற்றில் தவிர்க்க முடியாத தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி - தமிழ் அமைப்புகள் புகழாரம்

Published On 2022-06-21 09:20 GMT   |   Update On 2022-06-21 09:20 GMT
  • வரலாற்றில் தவிர்க்க முடியாத தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி என்று தமிழ் அமைப்புகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
  • பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

திருச்சி:

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், பைந்தமிழியக்கம் மற்றும் திருச்சி தமிழமைப்புகள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் வழக்கறிஞர் சகாபுதீன் தலைமை தாங்கினார்.

செயலர் நொச்சியம் சண்முகநாதன் வரவேற்றார். கி.ஆ.பெ.வி.கதிரேசன் முன்னிலை வகித்தார். தனியார் விடுதி முதல்வர் பாரிவள்ளல் முன்னிலை வகித்துக் கருணாநிதியின் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்து மாலை அணிவித்தார்.

பேராசிரியர் முனைவர் ப.சுப்பிரமணியன், முனைவர் கடவூர் மணிமாறன், பைந்தமிழியக்க இயக்குநர் புலவர் பழ.தமிழாளன், கோவிந்தம்மாள் தமிழ்மன்றத் தலைவர் தமிழ்ச்செம்மல் கோவிந்த சாமி, பேராசிரியர் முனைவர் செயலாபதி, பாவலர் ராசு நாச்சிமுத்து, பன்னாட்டு தமிழுறவு மன்றத்துணைச்செயலர் நிஜவீரப்பா, முனைவர் அசோகன், ஆகியோர் கருணாநிதியின் பன்முகத்திறனைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

பைந்தமிழியக்கத் துணைத்தலைவர் பாவலர் வேல்முருகன், பாவலர் செல்வராசன், பாவலர் சந்திரசேகரன் ஆகியோர் கலைஞரின் பண்பைப் பாவடித்துப் பாடினர். தமிழ்ப்பணி ஆசிரியர் வா.மு.சே.திருவள்ளுவர் பேசுகையில், இந்திய ஒன்றியத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத தனிமுத்திரை பதித்தவரே முத்தமிழறிஞர் கலைஞர். மியான்மரில் திருவள்ளுவருக்கு சிலை வடித்துத் திறந்து வைத்த செம்மல்.

தமிழுக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் அரணாகத் திகழ்ந்தவர். அவர் சென்ற வழியில் நாம் அனைவரும் தடம் மாறாமல் செல்வதே கலைஞருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. அரசிற்கும் தமிழினமே ஒன்றுபட்டு நிற்க உறுதியெடுப்பதே நம் பிறவிக் கடனாம் என்றார். நிறைவில் பாவலர் க.மாரிமுத்து நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் புலவர் தியாகராசன், பாலமுருகன், புலவர் பழனியாண்டி, அறிவியல் அறிஞர் தங்கவேலு, பானுமதி, பார்த்திபன், மகேந்திரன், சின்னதுரை, கனராசு, மணி உட்பட தமிழறிஞர்களும் தமிழ்ப்பற்றாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News