உள்ளூர் செய்திகள்

மனநிலை பாதித்து சுற்றி திரிந்த முதியவரை உறவினரிடம் ஒப்படைத்த முசிறி காவல்துறையினர்

Published On 2022-12-30 10:15 GMT   |   Update On 2022-12-30 10:15 GMT
  • மனநிலை பாதித்து சுற்றி திரிந்த முதியவரை முசிறி காவல்துறையினர் உறவினரிடம் ஒப்படைத்தனர்
  • இதன் விளைவாக கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக சீலா காணவில்லை என்று உறவினர்கள் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது

முசிறி:

திருச்சி முசிறி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சீலா(61) என்ற முதியவர் சுற்றி திரிந்து வந்தார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரை பாதுகாப்பாக காப்பகத்தில் ஒப்படைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதன் காரணமாக முசிறி போலீசார் அவரை காப்பகத்திற்கு அைழத்து சென்றனர். ஆனால் காப்பகத்திலோ உறவினர்கள் யாரேனும் இருந்தால்தான் சேர்த்துக்கொள்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து முதியவர் குறித்த விவரங்களை பல காவல் நிலையத்திற்கு முசிறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதன் விளைவாக கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக சீலா காணவில்லை என்று உறவினர்கள் புகார் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து புகார் அளித்த பசுபதிபாளையம் ஏ.வி.ஆர்.நகரை சேர்ந்த சகாயதாஸ் என்பவரை தொடர்பு கொண்டதோடு, முதியவரை அங்கு அழைத்து சென்று காவலர் பாலாஜி ஒப்படைத்தார். இது முசிறி போலீசாருக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.





Tags:    

Similar News