உள்ளூர் செய்திகள்

அதிகாரி ஏ.டி.எம். கார்டில் பணம் திருட்டு

Published On 2022-10-16 09:38 GMT   |   Update On 2022-10-16 09:38 GMT
  • திருச்சி அதிகாரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்
  • அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது

திருச்சி:

சேலம் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 57). இவர் திருச்சி துவாக்குடி நீர் பாசன மேலாண்மை பயிற்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அவரது தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் அவசர அவசரமாக பஸ்சில் சேலம் புறப்பட்டுச் சென்றார். இந்த அவசரத்தில் ஏ.டி.எம். கார்டு இருந்த கைப்பையை அவர் தொலைத்து விட்டார்.

பின்னர் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.30,000 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மைய சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர்.

இதில் அதிகாரிக்கு சொந்தமான ஏ.டி.எம். மூலம் ரூ.30,000 திருடிய திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் மூன்றாவது தெரு பகுதி சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை கைது செய்தனர்.

அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கொள்ளையன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News