உள்ளூர் செய்திகள் (District)

ஆன்லைன் அபராத முறையை கைவிட லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

Published On 2023-01-13 07:41 GMT   |   Update On 2023-01-13 07:41 GMT
  • தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
  • வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

நாமக்கல்:

மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கு வாகனங்களுக்கும், சாலைகளின் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் வாகன பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர்.

அதில் என்ன குற்றம் என தெரிவிக்காமல் பொதுவான குற்றம் என கூறி அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்க ளுக்கும் தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணிய

வில்லை உள்ளிட்ட முரணான காரணங்க ளுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரை தகுதி சான்றிதழ் உரிமை பெறும்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து

மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், டி.ஜி.பி ஆகியோருக்கும் ஈமெயில் மூலம் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News