உள்ளூர் செய்திகள்

மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்

Published On 2023-08-27 10:17 GMT   |   Update On 2023-08-27 10:17 GMT
  • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
  • ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 90 மில்லி அளவு கொண்ட 960 கர்நாடக மாநில மதுபாட்டில்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 482 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (35), கிருஷ்ணகிரி நடுப்பட்டி அருகே உள்ள பாண்டவர் கொட்டாயை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பதும், அவர்கள் கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருப்பத்தூர் காகங்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகிறார்கள்.

அதே போல கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் தாபா ஓட்டலில் சோதனை செய்தனர். அங்கு 1800 மதிப்புள்ள 10 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதை வைத்திருந்த வேட்டியம்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News