ஒன்றியக் குழு கூட்டம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தீர்மானம்
- ஏற்காடு ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
- அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தவள்ளி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் ஊராட்சி நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு. பின்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்ட்து. ஏற்காட்டில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.
பழுதடைந்த பள்ளிகள் புதுப்பிக்க ஆவன செய்யப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் சார்பில் நிலம் தர கோரிக்கை விடுத்தனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பதாகவும் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 2 ஏக்கர் நிலம் தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஏற்காடு ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணிமுரளி, வருதாயிரவி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.