சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இதையொட்டி சேலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம்:
சென்னை, கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது.
அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார்.
முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.5 நிமிடம் சேலத்தில் நின்ற நிலையில் இரவு 8. 43 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண்பதற்காக 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்
வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு