உள்ளூர் செய்திகள்

விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.


சுதந்திர போராட்ட வீரர்- வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு புதிய தமிழகம் கட்சியினர் மரியாதை

Published On 2022-09-10 08:43 GMT   |   Update On 2022-09-10 08:43 GMT
  • விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் நினைவு தினம்
  • ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி நினைவு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தூத்துக்குடி:

விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் நினைவு தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி நினைவு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அவர் கூறியதாவது:-

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய வீரன் சுந்தரலிங்கனார் சிறப்பினை வருங்கால தலைமுறையினர், மாணவ, மாணவிகள் அறிந்திட ஏதுவாக கவர்னகிரி நினைவு மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை புகைப்பட காட்சிகளாக தமிழக அரசு அமைக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு உருவ வெண்கல சிலைகளை விரைவில் அமைத்திடவும், மணிமண்டபத்தின் முன்புறமுள்ள பீரங்கி மேடுகள், முள்செடிகள் அகற்றி வரலாற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் திடலாக மாற்றியமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை போராட்ட வீரர்களை கவுரவித்து வரும் தமிழக அரசு எங்களின் கோரிக்கையையும் தாமதமின்றி நிறைவேற்றி தந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி செயலாளர் லெட்சுமண பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், முருகன், பெரு மாள், மாநகர இளைஞரணி மாரியப்பன், தொண்டர் அணி கருப்பசாமி, விவசாய அணி சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News