உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

நந்தி சிலை விவகாரம் தேனி வீரப்பஅய்யனார் கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்டு

Published On 2023-07-22 05:49 GMT   |   Update On 2023-07-22 05:49 GMT
  • நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டதால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

தேனி:

தேனி அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த 15-ந்தேதி கிராம கமிட்டி சார்பில் 5 அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை கிராம கமிட்டியினர் இந்துசமய அறநிலையத்துறையிடம் பெறவில்லை என கோவில் செயல்அலுவலர் ராமுதிலகம் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டார். இதனால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா, இணை ஆணையர் பாரதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

இதனிடையே மலைக்கோவிலில் சிைல வைக்கும் தகவலை முன்கூட்டியே துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்த செயல்அலுவலர் ராமுதிலகத்தை சஸ்பெண்டு செய்து இணைஆணையர் உத்தரவிட்டுள்ளார். இக்கோவிலுக்கு ஆண்டிப்பட்டி செயல்அலுவலர் ஹரீஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி ஜெயராமன் தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலை ஆகம விதிப்படி உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News