நாமக்கலில் உழவர் சந்தை முன்பு சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் காய்கறிகள்
- நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
- ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
தமிழக முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே விற்கும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது அந்த வகையில் விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைவாக இருக்கும் என்பதால் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானவர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் டன் வரை காய்கறிகள் இந்த உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தை முன்பு சாக்கடை நீர் அதிகமாக அளவில் தேங்கியுள்ளதால் துர்நாற்றமும் வீசி வருகிறது .இதனால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே தலையிட்டு சாக்கடை கால்வாய் நீர் தேங்குவதை தடுக்கவும் சாக்கடை கால்வாய் நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.