உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குலுக்கல் முறையில் தேர்வு நடந்த காட்சி.

காலி மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

Published On 2022-11-25 09:49 GMT   |   Update On 2022-11-25 09:49 GMT
  • வேலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் நடந்தது
  • 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகள், குடியிருப்புகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு சென்னை விட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணா, நிர்வாக செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 864 காலி மனைகள் 38 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 25 வீடுகளுக்கு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடந்தது.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒரு மாத கால அவகாசத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News