ஜலகண்டேஸ்வரர் கோவில் யாக பூஜையில் சக்தி அம்மா பங்கேற்பு
- 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டுள்ளது
- நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் விழுப்புரம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடந்து வருகிறது.
இன்று காலை ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.
நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு ஒட்டி வேலூர் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் டிஎஸ்பிக்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாளை காலை அபிஷேக விழாவின் போது கோவிலுக்குள் 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் விஐபி பாஸ் வழங்கப்பட்டு உள்ள கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.