பழைய துணி, பொருட்களை ஒப்படைக்க சிறப்பு மையம்
- வீடுகளில் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
- இல்லாதவர்கள் எடுத்து செல்லலாம்
வேலூர்:
தமிழகத்தில் 'தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புறம் 2.0 எனும் திட்டத்தின் கீழ் 'ஆர்ஆர்ஆர்' மையங்கள் நேற்று தொடங்கப்பட்டன.
அதன்படி, வேலுார் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், அந் தந்த சுகாதார அலுவலர்கள் தலைமையில், இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.
மாநகராட்சி 2வது மண்ட லத்தில், சுகாதார அலுவலர் லுார்துசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாந கராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
இதுகுறித்து, மாநகர நல அலுவலர் கணேசனிடம் கேட்டபோது கூறியது: அவர் மக்கள் தாங்கள் பயன் படுத்திய பொருட்களை, அவ்வப்போது தங்கள் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப கழிவுகளாக அப்புறப் படுத்துகின்றனர். இதனால், மாநகரில் கழிவுகள் உற்பத்தி என்பது தினமும் அதிகரித்து வருகிறது. அதேநேரம், இவற்றில் பெரும்பாலா னவை மீண்டும் பயன்ப டுத்தக்கூடியவை. மேலும், ஏழ்மை நிலையில் உள்ள வர்கள், இந்த பொருட்களை வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையை மாற்றி யமைக்க, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5, மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும்விதமாக, 'தூய்மை பாரதம்' இயக் கத்தின்கீழ், தமிழக அரசால் 'என் வாழ்க்கை-என்சுத்த மான நகரம்' எனும் தலைப் பின் கீழ், மே 20ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 5ம் தேதி வரை மக்கள் கூடும் இடங்களில் 'ஆர்ஆர்ஆர்' (ரெடியூஸ் தேவையற்ற பொருட்கள் வாங்குவதை குறைத்தல், ரீ யூஸ்- வாங்கியபொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்து தல்,ரீசைக்கிள் மறுசுழற்சி செய்து பயன்ப டுத்துதல்) மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன் முன்னோட்ட மாக, வேலுார் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல் அலுவலகங்க ளில் இந்த 'ஆர்ஆர்ஆர் மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இங்கு பலதரப் பட்ட மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படும் துணிகள். புத்தகங்கள் ஆகியவற்றை தேவைப்படுபவர்கள் எடு த்து பயன்படுத்திக் கொள் ளலாம். அதேபோன்று, மின் சாதன பொருட்களை இ- கழிவு சேகரிப்பாளர்கள் மூலம் எடுத்துச்செல்லப் இவ்வாறு அவர் தெரி பட்டு மறுசுழற்சிக்கு பய ன்படுத்தப்படும். உதாரண மாக, ஒரு டியூப்லைட்டில் உள்ள அலுமினியம் மற்றும் கண்ணாடிகளை பிரித்து, மறுசுழற்சி செய்து, புதிய தாக பயன்படுத்தப்படும். அதுபோன்றே மற்ற மின் சாதன பொருட்களும் தேவைக்கேற்ப பயன்படுத் தப்படும்.
இதன்மூலம், வீடுகளில் தேவையற்ற பொருட்கள் தங்காது, சாலையிலும் குப் பைகள் தேங்காது. எனவே, மக்கள் மேற்குறிப்பிட்ட மையங்களை பயன்படுத் திக் கொண்டு, மாநகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வரவேண்டும்.