உள்ளூர் செய்திகள்
சாத்துமதுரை பாலசுப்பிரமணியன் கோவிலில் சூரசம்ஹார விழா தொடக்கம்
- ஏராளமானோர் தரிசனம்
- பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சாத்து மதுரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நேற்று தொடங்கியது.
கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு முதல் நாளான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபவம், மற்றும் சூரசம்ஹாசரம் நடைப்பெற உள்ளது.
கொடியேற்ற விழாவில் சாத்துமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.