ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்
- ஏர்வாடி பகுதியில் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
- வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏர்வாடி:
வேளாண்மை துறை சார்பில் களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேளாண் பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் களக்காடு சிங்கிகுளம் பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
இத்திட்டத்தை பற்றிய விரிவான கருத்தாக்கத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது வழங்கினார். சிங்கிகுளம் கால்நடை உதவி மருத்துவர் ஜான் ரவிகுமார் ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம் செய்யும் செயல் விளக்கத்தை எடுத்துரைத்தார்.
வேளாண்மை பொறியியல்துறையின் திட்டங்களை உதவி பொறியாளர் அருணா விளக்கி கூறினார். தோட்டக்கலையின் திட்டங்களை தோட்டக்கலை உதவி அலுவலர் முத்துவிநாயகம் விளக்கி கூறினார்.
வேளாண் வணிக துறை சார்ந்த திட்டங்களை உதவி வேளாண் அலுவலர் முத்து வீர் சிங் விளக்கி கூறினார். பல்வேறு வேளாண் சிறப்பு திட்டங்களை அப்பகுதி விவசாயிகள் அறிந்து கொண்டு பயனடைந்தனர்.
உதவி கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார். இதில் களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் முகம்மது தலைமை தாங்கினார். சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா சுரேஷ் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி செய்திருந்தார். கோவிலம்மாள்புரம் வேளாண்மை அலுவலர் வானுமாமலை, தோட்டக்கலை அலுவலர் இசக்கியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் அப்துல் ரவூப், செங்களாகுறிச்சி கிராம துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் காமாட்சி, உதவி கால்நடை மருத்துவர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.