- இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
- அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவா மற்றும் வீரையன் ஆகியோர் அருகிலுள்ள கோவில் திருவிழாவிற்காக தனது குடும்பத்துடன் சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது.
அருகில், சிவா என்பவரது வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென பரவியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இதில், இருவரது வீடுகளும் முழுவதுமாக எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
இந்த சம்பவம் குறித்து கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்க்கவில்லை என குற்றஞ்சாட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால், மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.